இந்தியா

பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால் காஷ்மீரில் ரத்தம் சிந்துவது தொடரும்: மெஹபூபா முப்தி 

IANS

ஸ்ரீநகர்: பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால் காஷ்மீரில் ரத்தம் சிந்துவது தொடரும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். 

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியைச் சேர்ந்தவர் மனன் பஷீர் வானி. இவர் அலிகார் இஸ்லாமிய பல்கலையில் ஆய்வு முனைவர் பட்டம் பெற்றவர். இவர் இந்த ஆண்டு ஜனவரியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து விட்டார். அத்துடன் குப்வாரா பகுதி பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இவரும் மற்றொரு தீவிரவாதியும் வியாழனன்று  குப்வாரா மாவட்டம் சத்குண்ட் கிராமத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, 'பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால் காஷ்மீரில் ரத்தம் சிந்துவது தொடரும்' என்று  தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இன்று ஆய்வு முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் வாழ்வை விடுத்து சாவைத்  தேர்வு செய்து என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒவ்வொரு நாளும் படித்த இளைஞர்களை இழந்து கொண்டிருப்பதால், இது முழுமையாக நம்முடைய இழப்புதான்

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள இது முக்கியமான நேரம். இதற்கு ஒரு தீர்வு காணும் விதமாக, இந்த பிரச்னையில் தொடர்புடைய பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து பேச்சு வார்த்தை துவங்கப்படாவிட்டால் காஷ்மீரில் ரத்தம் சிந்துவது தொடரும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT