கட்சிகளுக்கு நன்கொடை: விதிகளைத் திருத்த சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

பெயரைத் தெரிவிக்காமல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருபவர்கள் ரூ.2000-க்கு மேல் அளிக்கக் கூடாது என்று விதிகளைத் திருத்த வேண்டுமென மத்திய சட்டத் துறை அமைச்சகத்திடம்


பெயரைத் தெரிவிக்காமல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருபவர்கள் ரூ.2000-க்கு மேல் அளிக்கக் கூடாது என்று விதிகளைத் திருத்த வேண்டுமென மத்திய சட்டத் துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இப்போதைய விதிகளின்படி ஒரு நபர் தனது பெயர் தெரிவிக்காமல் அரசியல் கட்சிகளுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 வரை நன்கொடை அளிக்க முடியும். ரூ.20,000 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை அளித்தால் மட்டுமே பெயர் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்பது விதியாகும்.
இது தொடர்பாக சட்ட அமைச்சகத்தின் சட்ட இயற்றுதல் பிரிவுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த வாரம் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஒருவரிடம் இருந்து ரொக்கமாக அதிகபட்சமாக ரூ.2000 வரை மட்டுமே அரசியல் கட்சிகள் நன்கொடை பெற சட்டம் இயற்ற வேண்டும் என்று ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.2,000 வரை மட்டுமே பெயர் தெரிவிக்காமல் நன்கொடை அளிக்க முடியும் என்றும் விதிகளைத் திருத்த ஏற்கெனவே தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கோரிக்கை இப்போதுவரை நிலுவையில்தான் உள்ளன.
இந்த கோரிக்கை தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த ஆண்டே தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இப்போதுள்ள விதிகளின்படி அதிகபட்சமாக ரூ.20,000 வரை பெயர் தெரிவிக்காமல் கொடுக்க முடியும். இதன் மூலம் ரூ.20,000 வரையிலான தொகையை அரசியல் கட்சிகள் ரொக்கமாக பெற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவேதான், ரொக்கமாக நன்கொடை பெறுவதை ரூ.20,000-இல் இருந்து ரூ.2,000 ஆக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் பெயர் தெரியாத நபர்களிடம் இருந்து நன்கொடை பெறுவதைத் தடுக்க உறுதியான சட்டம் ஏதும் இதுவரை இயற்றப்படவில்லை. எனினும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் ஒரு விதியின்படி, ரூ.20,000-க்கு அதிகமான தொகையை பெயர் தெரிவிக்காத நபரிடம் இருந்து பெற முடியாது. ஆனால், இந்த விதி உறுதியாகப் பின்பற்றப்படுவது இல்லை. எனவேதான், ரூ.2000-க்கு மேல் ரொக்கமாக நன்கொடை பெறுவதை தடை செய்ய சட்டம் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com