இந்தியா

மெஹூல் சோக்ஸி உள்ளிட்டோரின் ரூ.218 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

DIN


பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடிய விவகாரத்தில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெஹூல் சோக்ஸி மற்றும் அவரது கூட்டாளி உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.218 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தலைமறைவாக இருக்கும் வைர வியாபாரி மெஹூல் சோக்ஸி, அவரது கூட்டாளி மிஹிர் பன்சாலி, ஏ.பி. ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி பார்க் நிறுவனம் ஆகியவற்றுக்கு சொந்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகளை முடக்குவது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் 3 உத்தரவுகளை மும்பையில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகம் பிறப்பித்துள்ளது. இதன்படி, 3 பேருக்கும் சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அந்த சொத்துகளின மதிப்பு ரூ.218 கோடி ஆகும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினரும், மற்றோர் வைர வியாபாரியுமான மெஹூல் சோக்ஸி ஆகியோர் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறை அமைப்பும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்தியாவை விட்டு வெளியேறிய மெஹூல் சோக்ஸி, பன்சாலி ஆகியோர் தற்போது எங்குள்ளனர் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. மெஹூல் சோக்ஸி கடைசியாக அன்டிகுவா, பார்புடா ஆகிய நாடுகளில் தென்பட்டதாக தெரிகிறது. இந்த வழக்கில் பன்சாலிக்கு எதிராக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போல், அண்மையில் ரெட் கார்னர் நோட்டீஸை வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT