ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த ஜஸ்வந்த் சிங் மகன்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய
தில்லியில் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்த பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மணவேந்திர சிங்
தில்லியில் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்த பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மணவேந்திர சிங்


காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்கின் மகன் மணவேந்திர சிங் புதன்கிழமை இணைந்தார்.
தில்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டுக்கு புதன்கிழமை சென்று அவரை மணவேந்திர சிங் சந்தித்துப் பேசினார். அப்போது அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், சச்சின் பைலட், அவினாஷ் பாண்டே, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், காங்கிரஸ் கட்சியில் மணவேந்திர சிங் இணைந்தது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் மணவேந்திர சிங் பேசுகையில், சுயமரியாதைக்காகவே, பாஜகவில் இருந்து விலகியுள்ளேன். இது என்னுடைய முடிவு மட்டுமல்ல; சுயமரியாதையை விரும்பும் அனைத்து நபர்களின் முடிவாகும் என்றார்.
ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சியோ தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு மணவேந்திர சிங் வெற்றி பெற்றார். அதேநேரத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மணவேந்திர சிங்கின் தந்தையும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இருப்பினும், அந்தத் தேர்தலில் ஜஸ்வந்த் சிங் சுயேச்சையாக போட்டியிட்டார். பாஜக சார்பில் காங்கிரஸில் இருந்து விலகி அக்கட்சியில் இணைந்த சோனோராமுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சோனோராமுக்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆதரவு அளித்தார். இதனைத் தொடர்ந்து, அந்தத் தேர்தலில் ஜஸ்வந்த் சிங் தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில், ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததால், பாஜகவில் இருந்து மணவேந்திர சிங் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனிடையே, பார்மரில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மணவேந்திர சிங் எம்எல்ஏ, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைவதென்று மணவேந்திர சிங் முடிவெடுத்தார்.
ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு வரும் டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த மணவேந்திர சிங், காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான ஆஷிஸ் தேஷ்முக்கும், காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com