இந்தியா

அதி சொகுசுப் பெட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க பியூஷ் கோயல் ஆணை

DIN

அதி சொகுசுப் பெட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆணையிட்டுள்ளார்.

ரயில்களில் மொத்தம் 336 அதி சொகுசுப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் 62 குளிர்சாதன வசதியுடன் கூடியதாகும். இதில் 2 படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை மற்றும் ஒரு கூடுதல் அறையுடன் அமைந்துள்ளது. ஒவ்வொன்றிலும் 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 5 நாட்கள் வரை தங்க முடியும். 

இவைகளை ரயில்வேத்துறை மூத்த அதிகாரிகள் மற்றும் இதர விவிஐபி அந்தஸ்து பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலை உள்ளது.

இந்நிலையில், இந்த அதி சொகுசுப் பெட்டிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் வழங்குமாறு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆணையிட்டுள்ளார். இதில் தனது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 பெட்டிகள் உட்பட அனைத்தையும் பொதுமக்களுக்கான வணிக சேவைகளுக்கு வழங்கும் அறிவிப்பை ஐஆர்சிடிசி-யிடம் அவர் வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT