ஹோட்டலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் மகனுக்கு 3 நாள் போலீஸ் காவல் 

தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் துப்பாக்கியால் மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், சரணடைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் மகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்.. 
ஹோட்டலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் மகனுக்கு 3 நாள் போலீஸ் காவல் 

புது தில்லி: தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் துப்பாக்கியால் மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், சரணடைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் மகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்தவா் ராகேஷ் பாண்டே. இவரது மகன் ஆஷிஷ் பாண்டே. இவா் தில்லி ஆா்.கே. புரத்தில் உள்ள ஹயாத் ரீஜென்ஸி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவரை துப்பாக்கியால் மிரட்டி, தகாத வாா்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் திங்கள்கிழமை வைரலாகப் பரவியது. போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆஷிஷ் பாண்டே தில்லி நீதிமன்றத்தில் வியாழன் அன்று  சரணடைந்தார். 

ஆஷிஷ் பான்டேவின் வழக்கறிஞர்கள் சார்பில் அவருக்கு இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை மூன்றுநாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு ஆஷிஷ் பான்டேவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆஷிஷ் பான்டே முன்னாள் எம்.பி.யின் மகன் என்பதால் இந்த விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க முயல்கின்றன. அவரது துப்பாக்கியை வேண்டுமானால் கோர்ட்டில் ஒப்படைத்து விடுகிறோம். அவருக்கு விசாரணை காவல் அவசியமற்றது என அவர் வாதிட்டார்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் முழுமையாக விசாரித்த நீதிமன்றம், ஆஷிஷ் பாண்டேவை வரும் 22-ம் தேதிவரை போலீஸ் காவலில் மட்டும் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com