வல்லபபாய் படேல் சிலையில் தமிழுக்கு நேர்ந்த சோகம்

உலகின் உயர்ந்த சிலையான சர்தார் வல்லபபாய் படேல் சிலையில் ஒற்றுமைக்கான சிலை என்பதை ஸ்டேட்சு ஆஃப் யுனைட்டி என்று தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது விமரிசனத்துக்குள்ளானது.  
புகைப்படம்: டிவிட்டர்
புகைப்படம்: டிவிட்டர்

உலகின் உயர்ந்த சிலையான சர்தார் வல்லபபாய் படேல் சிலையில் ஒற்றுமைக்கான சிலை என்பதை ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்று தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது விமரிசனத்துக்குள்ளானது.  

குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் கரையோரத்தில் சர்தார் சரோவர் அணை அருகில் நாட்டின் முதல் துணைப் பிரதமரும், இந்திய தேசத்தை ஒருங்கிணைத்தவருமான சர்தார் வல்லபபாய் படேலின் 182 மீட்டர் உயர பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒற்றுமைக்கான சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் ஸ்டேட்சு ஆஃப் யுனைட்டி என்று அழைக்கப்படும்.

இந்த சிலையை பிரம்மாண்டமாக அமைத்தாலும், சிலையின் பெயரை மொழிபெயர்த்ததில் மிகப் பெரிய தவறு ஏற்பட்டது. 'ஸ்டேட்சு ஆஃப் யுனைட்டி' என்பதை தமிழாக்கம் செய்தால், ஒற்றுமைக்கான சிலை என்று வரும். ஆனால், அது 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' என்று அங்கு தவறாக மொழிபெயர்க்கப்பட்டதுது. 

இதையடுத்து, இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்த, சமூக வலைதளங்களில் இதற்கு கடுமையான விமரிசனங்கள் எழத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, அதை மறைக்கும் வகையில் அந்த வாக்கியம் அழிக்கபப்ட்டது. எனினும், அது தற்போதும் தெரியும் வகையிலே உள்ளது.

குஜராத் மொழியிலும் அது தவறாகவே மொழிபெயர்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com