புதன்கிழமை 21 நவம்பர் 2018

தெலங்கானாவில் விபத்து: மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்ததில் 30 பேர் பலி?

DIN | Published: 11th September 2018 12:55 PM


தெலங்கானாவின் ஜெகதால பகுதியில் மலைப் பாதையில் இருந்து அருகில் இருந்த பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 30 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

முதற்கட்டமாக 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குண்டக்கட்டு மலைப் பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது. மீட்புப் பணியில் காவல்துறையினரும், கிராம மக்களும் ஈடுபட்டுள்ளனர். மலைப்பகுதி என்பதால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு அப்பகுதி எஸ்பி சிந்து, மாவட்ட ஆட்சியர் சரத் இருவரும் விரைந்துள்ளனர்.
 

More from the section

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை: சுஷ்மா
சத்தீஸ்கர் பேரவைத் தேர்தலில் 74% வாக்குப்பதிவு
பணமதிப்பிழப்பு - ஊழல் ஒழிப்புக்கான கசப்பு மருந்து : பிரதமர் மோடி
மக்களவைத் தேர்தலில் வெல்ல முடியாது என்பது பாஜகவுக்கு தெரியும்: ராகுல் காந்தி
சிபிஐ இயக்குநரின் பதில் மனு கசிவு: உச்சநீதிமன்றம் கண்டனம்