வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 55; டீசல் லிட்டருக்கு ரூ. 50: எப்போது கிடைக்கும் தெரியுமா? 

DIN | Published: 11th September 2018 05:18 PM

 

ராஞ்சி: இந்தியாவில் பயோ எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கும் பட்சத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 55-க்கும்,  டீசல் ரூபாய் 50-க்கும் விற்பனை செய்ய இயலும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு தற்போது பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறது    

இந்நிலையில் இந்தியாவில் பயோ எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கும் பட்சத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 55-க்கும்,  டீசல் ரூபாய் 50-க்கும் விற்பனை செய்ய இயலும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 

சத்தீஷ்கரில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:

சத்தீஷ்கரில் விவசாயத்துறை வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. முயன்றால் மாநிலம் பயோ எரிபொருள் உற்பத்தியில் முக்கிய மையமாக ஆக முடியும். இங்குள்ள ஜாத்ரோபா என்னும் இடத்தில் உள்ள பயோ எரிபொருள் உற்பத்தி மையத்தால், விமானத்திற்கு எரிபொருள் வழங்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி எரிபொருளால் இயங்கும் விமானம் தில்லி வரை  சென்றது. 

குறிப்பாக பயோ-டெக்னாலஜி ஆய்வு மையம் ஒன்றை அமைக்க வேண்டும். எத்தனால், மெதனால், பயோ-எரிபொருள் பயன்பாட்டை நாம் தொடங்கினால் பெட்ரோலியத்தை சார்ந்திருப்பது குறையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறைய வாய்ப்புள்ளது. . 
 
ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் கோடிக்கு நாம் பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்கிறோம். பயோ எரிபொருளைப் பயன்படுத்தி முதன்முதலாக நாம் விமானத்தை தற்போது இயக்கியுள்ளோம். இதுபோன்றே பஸ், ஆட்டோ, வாடகை கார், போன்றவற்றுக்கு எத்தனால், பயோ எரிபொருள் பயன்பாட்டை கட்டாயமாக்குவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 

தற்போது பெட்ரோலிய அமைச்சகம் 5 எத்தனால் ஆலைகளை அமைத்து வருகிறது. இதனால் நெல், கோதுமை, கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்க ஏதுவாக இருக்கும். இது முழுமையாக சாத்தியமானால் இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.50-க்கும், பெட்ரோல் விலை ரூ.55-க்கும் விற்பனை செய்ய முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags : india petrol diesel bio fuel nithin gadkari high price

More from the section

துல்லியத் தாக்குதல் அரசியலா, தேசப்பற்றா? மத்திய அமைச்சர் ஜாவடேகர் பதில்
3 காவலர்கள் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகளை பிடித்தேத் தீருவோம் என காவல்துறை உறுதி
ஷிவ்பால் யாதவின் பிளவு நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக பிரதிபலிக்கும்: சமாஜ்வாதி எம்.பி ஒப்புதல்  
தேள் போன்று கொடுக்கை வைத்து கொட்ட மட்டுமே தெரிந்தவர் அகிலேஷ்: அமர் சிங் கடும் தாக்கு 
செய்தி எதிரொலி: மணப்பாறையில் கண்பார்வை மாற்றுத் திறனாளிக்கு ஏடிஎம் அட்டை வழங்கல்