புதன்கிழமை 12 டிசம்பர் 2018

இடுப்பு மாற்று சிகிச்சை: பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

DIN | Published: 12th September 2018 12:51 AM


இடுப்பு மாற்று சிகிச்சையால் பாதிக்கப்பட்டோர், மத்திய அல்லது மாநில குழுவை அணுகலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இடுப்பு மாற்று சிகிச்சையால் பாதிக்கப்பட்டோர், மத்திய குழு அல்லது மாநில குழுவை அணுகலாம். மத்திய குழுவை அணுக விரும்புவோர், தில்லியின் கோட்லா சாலையில் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பின் சட்டப் பிரிவுக்கு கடிதம் எழுதலாம். அதேபோல், LEGALCELL@CDSCO.NIC.IN என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம். மாநில குழுவை அணுகுவதற்கு விரும்புவோர், சம்பந்தப்பட்ட மாநில மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டாளரை அணுகலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டி-பை இன்டர்நேஷனல் உற்பத்தி செய்த இடுப்பு மாற்று கருவி பொருத்தப்பட்டோரில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோருக்கு எவ்வளவு இழப்பீடு அளிப்பது என்பது குறித்து முடிவு செய்ய ஆர்.கே. ஆர்யா தலைமையில் 5 பேர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இதேபோல், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் தனியே குழுவை அமைக்கும்படி மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

More from the section

மாநிலங்களவையில் மேக்கேதாட்டு விவகாரத்தை எழுப்பிய அதிமுக எம்.பி.க்கள்: அமளி காரணமாக ஒத்திவைப்பு
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு: மாயாவதி
ம.பி.யில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ்: ஆளுநருடன் தலைவர்கள் சந்திப்பு
ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்ததாஸ் பதவியேற்பு
தெலங்கானாவில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார் சந்திரசேகர ராவ்