வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

இந்தியாவுக்கு தடை விதிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை: அமெரிக்கா

DIN | Published: 12th September 2018 01:17 AM


ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்க திட்டமிட்டுள்ள இந்தியாவுக்கு எதிராக கடுமையான தடைகளை விதிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா - இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியா, ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் மிக முக்கிய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று பிற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதனை மீறும் பிற நாடுகளுடன் அமெரிக்கா சார்பில் பாதுகாப்பு தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
அதே சமயம், பிற நாடுகளுக்கு தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அதிபருக்கு அந்தச் சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ரஷியாவிடம் இருந்து, ரூ.30,000 கோடி மதிப்பில், எஸ்-400 என்ற தொலைதூர ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதனால், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா தடை விதிக்குமா? அல்லது சிறப்பு அதிகாரத்தின்படி அதிபர் விலக்கு அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க முதன்மை துணை செயலாளர் அலைஸ் வெல், வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
ஒரு நாட்டுக்கு தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக அதிபருக்கு அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரம் அளித்துள்ளது. அந்த முடிவு என்பது தனியொரு நாட்டின் முக்கியத்துவத்தை பொறுத்து அமையும் என்றார் அவர்.
 

More from the section

முத்தலாக் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
ரஃபேல்: விசாரணைக்கு உத்தரவிட முடியாது: காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு
லோக்பால் தேர்வுக் குழுக் கூட்டம்: 6-ஆவது முறையாக புறக்கணித்தார் கார்கே
மனோஜ் திவாரி ஆஜராக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கோதாவரி புஷ்கரத்தில் 29 பேர் பலியான சம்பவம்: ஆந்திர அரசு மீது தவறு இல்லை