புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

எம்எல்ஏ, எம்பி-க்கள் மீதுள்ள குற்றவியல் வழக்கு விபரங்களை சமர்பிக்க வேண்டும் -  உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

DIN | Published: 12th September 2018 02:48 PM

 

எம்எல்ஏ, எம்பி-க்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கு விபரங்களை அளிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் அஷ்வின் உபத்யாய சார்பாக ஆஜரான வழக்குரைஞர், சிறப்பு நீதிமன்றங்கள் நடைமுறையில் செயல்படுகிறதா என்பதை உச்ச நீதிமன்றம் கவனிக்க வேண்டும் வலியுறுத்தினார். அதற்கு உதாரணமாக, போஸ்கோ சிறப்பு நீதிமன்றங்களில் நீதிபதிகளே இல்லாமல் செயல்பாடற்ற நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார். 

இதையடுத்து, மத்திய சட்ட அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "1,233 குற்றவியல் வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில், 136 வழக்குகள் முடிவடைந்து இன்னும் 1,097 வழக்குகள் நிலுவையில் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பிரமாணப் பத்திரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி நவீன் சின்ஹா மற்றும் நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு திருப்தியளிக்கவில்லை. 

இதன் காரணமாக எம்எல்ஏ, எம்பி-க்கள் மீது நிலுவையில் உள்ள அனைத்து குற்றவியல் வழக்குகளின் விபரங்களையும் சமர்பிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், 2017 டிசம்பர் உத்தரவுப்படி, வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டதா என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எம்எல்ஏ, எம்பி-க்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியம் இருக்குமா என்பது குறித்தும் தெரிந்துகொள்ள உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

More from the section

பயங்கரவாதத்தை ஒடுக்க சா்வதேச அளவில் கருத்தொற்றுமை அவசியம்: வெங்கய்ய நாயுடு
பிரதமர் மோடி - ஆப்கன் அதிபர் கானி சந்திப்பு
17 மாவட்டங்களில் தண்ணீா் தட்டுப்பாடு அபாயம்?: சிக்கலில் மகாராஷ்டிரம்!
ரஃபேல் ஒப்பந்த விசாரணை: காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு
உலகப் புகழ் பெற்ற கேரள படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா? கடனில் மூழ்கும் அபாயத்தில் படகு குழாம்கள்