வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

காஷ்மீர், ஹரியாணாவில் நிலநடுக்கம்

DIN | Published: 12th September 2018 07:40 AM

 

ஜம்மு - காஷ்மீர், ஹரியாணா மாநிலங்களில் புதன்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

முதலில் ஜம்மு - காஷ்மீர் பகுதியில் அதிகாலை 5.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, ஹரியாணா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜாஜர் பகுதியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.1 புள்ளிகளாாக பதிவாகியுள்ளது. 

முன்னதாக, இரு தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மற்றும் தில்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.  

More from the section

பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
இத்தாலியில் ரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம்
சூரியனை ஆய்வு செய்யும் விண்கலப் பணி 4 ஆண்டுகளில் நிறைவடையும் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
இந்தியாவில் ஓராண்டில் 100 ஜிபிபிஎஸ் இணையதள வேகம்
நாடாளுமன்றத்தில் நேருவுக்கு தலைவர்கள் மரியாதை