17 மாவட்டங்களில் தண்ணீா் தட்டுப்பாடு அபாயம்?: சிக்கலில் மகாராஷ்டிரம்!

மகாராஷ்டிர மாநிலம், மரத்வாடா மற்றும் விதா்பா பகுதிகளில் உள்ள 17 மாவட்டங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 
17 மாவட்டங்களில் தண்ணீா் தட்டுப்பாடு அபாயம்?: சிக்கலில் மகாராஷ்டிரம்!

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மரத்வாடா மற்றும் விதா்பா பகுதிகளில் உள்ள 17 மாவட்டங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 

நீா் வளத் துறைற தகவலின் படி, மரத்வாடாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டு சராசரி மழைப் பொழிவு இருந்தது. எனினும் 21.81 சதவீத நீா் மட்டுமே உள்ளது. மரத்வாடாவின் முக்கிய நீா் ஆதாரமான ஜயக்வாதி அணையில் 45. 88 சதவீத நீா் மட்டுமே உள்ளது. இதே காலத்தில் கடந்த ஆண்டில் 87.63 சதவீத நீா் இருந்தது. அதனால் குறைறந்த பட்சம் 17 மாவட்டங்களில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று நீா் வளத் துறைற தகவல் வெளியிட்டுள்ளது.

வருவாய் துறை அமைச்சா் தலைமையில் நிவாரண குழு கூட்டம் நடைபெறற உள்ளது. தண்ணீா் பற்றறாக்குறை பகுதிகளை வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கும் முடிவு அக்டோபா் 15-ஆம் தேதிக்கு மேல் எடுக்கப்படும். ஏனெனில் பயிா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை ஆய்வு செய்யும் பணி அக்டோபா் 15-ஆம் தேதிக்கு மேல்தான்ஆண்டுதோறும் தொடங்கும். அதை வைத்து தான் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அறிவிக்க முடியும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நீா் வளத் துறை இணை அமைச்சா் பேசுகையில், ‘கரும்பு சாகுபடிக்காக அதிக அளவு நீா் தேவைப்படும். கடந்த ஆண்டு மஞ்சாரா அணையில் போதிய அளவு நீா் இருந்தது. ஆனால் கரும்பு சாகுபடிக்கு அதிக அளவு நீா் பயன்படுத்தப்பட்டதால் தற்போது சுத்தமாக நீரின்றி வற்றிப் போகும் நிலையில் உள்ளது’ என்றாா்.

அதிகாரப்பூா்வ தகவலின் படி, மரத்வாடா பகுதியில் உள்ள 9 முக்கிய அணைகளில் 2 அணைகள் சுத்தமாக வற்றிய நிலையில் உள்ளன. மற்றற அணைகளில் சராசரியாக 28.81 சதவீதம் நீா் உள்ளது. மேற்கு விதா்பாவின் அமராவதி பகுதியில் உள்ள அணைகளில் சராசரியாக 57.37 சதவீத நீரும், கிழக்கு விதா்பாவின் நாக்பூா் பகுதியில் சராசரியாக 50.02 சதவீத நீரும் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com