இந்தியா

எந்த ஒரு கட்சிக்கும் பணியாற்றும்படி தொண்டர்களை ஆர்எஸ்எஸ் வலியுறுத்துவதில்லை

DIN


எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காகவும் பணியாற்றும்படி தனது தொண்டர்களிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பு வலியுறுத்துவதில்லை; அதே நேரத்தில் தேச நலன் கருதி செயல்படுபவர்களுக்கு துணை நிற்குமாறு அறிவுரை வழங்கப்படுகிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
தில்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மோகன் பாகவத் பேசியதாவது:
ஒரு குறிப்பிட்ட கட்சியின் (பாஜக) செயல்பாட்டின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக கருத்து உள்ளது. ஆனால், அது தவறானது. ஏனெனில், எந்த ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படும்படி தொண்டர்களை ஆர்எஸ்எஸ் கேட்டுக் கொள்வது இல்லை. தேச நலன் சார்ந்து செயல்படுபவர்களுக்கு துணை நிற்குமாறு மட்டுமே கேட்டுக் கொள்கிறோம். அரசியலில் இருந்து ஆர்எஸ்எஸ் எப்போதும் விலகியே இருக்கிறது. ஆனால், தேச நலனில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.
ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியில் (பாஜக) மட்டும் இருப்பதை சுட்டிக் காட்டினால், அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில், எந்தக் கட்சியை சார்ந்து இருக்குமாறு நாங்கள் யாரையும் வலியுறுத்துவது இல்லை.
ஹிந்து ராஜ்ஜியம் என்பதில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று பொருள் அல்ல. அது அனைத்து மதங்கள், அனைத்து நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது. வேற்றுமையில் ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதான் நமது கலாசாரத்தின் அடிப்படை. இதனைத்தான் இந்த ஹிந்துத்துவம் என்கிறோம்.
தனிமனிதர்களின் கண்ணியம், தேச ஒற்றுமையின் வலிமை, சகோதரத்துவம் குறித்து அம்பேத்கர் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயங்களில் ஆர்எஸ்எஸ் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மொழி, இனம், மதம், ஜாதி மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி நம்மை ஒற்றுமைப்படுத்துவது நமக்குள் உள்ள தேசப்பற்றும், மனித நேயமும்தான் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT