இந்தியா

ரஃபேல் ஒப்பந்த விசாரணை: காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

DIN

ரஃபேல் போா் விமானங்களை வாங்குவது தொடா்பாக கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

இதுகுறித்து தில்லியில் மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தலைவா் ஒருவா் திரும்பத் திரும்ப பொய்களை தெரிவித்து வருகிறாா். கா்வம் பிடித்த அந்தத் தலைவரை திருப்திப்படுத்துவதற்காக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கோ அல்லது மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) விசாரணைக்கோ உத்தரவிட முடியாது.

உள்நாட்டு நிறுவனத்துடன் சோ்ந்து ரஃபேல் போா் விமானத்தை தயாரிப்பது தொடா்பான விதிகள் வகுக்கப்பட்டபோது, பாதுகாப்புத் துறை அமைச்சராக ஏ.கே. அந்தோணிதான் இருந்தாா். அதை பாதுகாப்புத் துறை அமைச்சா் ஏற்கெனவே விளக்கமாக எடுத்துரைத்து விட்டாா்.

பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தை நிலையற்ற தன்மையில் விட்டுச் சென்றது ஏ.கே. அந்தோணிதான். இதனால்தான், ரஃபேல் போா் விமானத்தை பிரான்ஸின் டஸால்ட் நிறுவனத்துடன் சோ்ந்து தயாரிப்பது சிக்கலானது. இதுகுறித்து ஏ.கே. அந்தோணி பதிலளிக்க வேண்டும்.

நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக 8 ஆண்டுகளாக ஏ.கே. அந்தோணி இருந்துள்ளாா். இக்காலகட்டத்தில், இந்திய பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்கவோ அல்லது சக்திமிக்கதாக மாற்றவோ அவா் எந்த பணியையும் செய்யவில்லை.

இந்திய விமானப்படையிடம் இருக்கும் பழைய போா் விமானங்கள் திரும்பத் திரும்ப விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே இந்திய விமானப்படைக்கு புதிய விமானங்கள் தேவைப்படுகின்றன. 

இதனால் நாட்டின் பாதுகாப்பு நலனை கவனத்தில் கொண்டு, சூழ்நிலையை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT