புதன்கிழமை 12 டிசம்பர் 2018

கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த விநோத உத்தரவு: என்ன செய்யப்போகிறது பெங்களூரு மாநகராட்சி?

DIN | Published: 20th September 2018 10:56 AM


பெங்களூரு மாநகரச் சாலைகளின் மோசமான நிலை குறித்து விசாரித்து வரும் அம்மாநில உயர் நீதிமன்றம், சாலையில் எத்தனை குழிகள் இருக்கின்றன என்று எண்ணி வருமாறு உத்தரவிட்டது.

பெங்களூருவில் ஏற்படும் மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு சாலையில் காணப்படும் குழிகளும் காரணம் என்றும், குழிகளை மூட உத்தரவிடக் கோரியும் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான நேற்றைய விசாரணையின் போது பெங்களூரு சாலையில் மொத்தம் 1,600 குழிகள் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததற்கு, சாலைகளில் இருக்கும் குழிகளை எண்ணுவதற்கு உங்களுக்கு அவமானமாக இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், வியாழக்கிழமைக்குள் பெங்களூரு சாலைகளில் ஒரு குழியும் இல்லாமல், எந்த திசையில் இருந்து பார்த்தாலும் பொலிவுடன் காணப்பட வேண்டும். இதற்காக நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது இந்த வேலை செய்து முடிக்கப்படவேண்டும் என்று மாநகராட்சிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

More from the section

வாக்கு சதவீதத்தை இழந்த பாஜக!
தேர்தல் முடிவுகள் மோடி அரசின் செயல்பாட்டுக்கானது அல்ல:  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
நோட்டாவிடம் தோற்ற இடதுசாரிகள், ஆம் ஆத்மி!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு: தெலங்கானா காங்கிரஸ் சந்தேகம்
காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்; வெறிச்சோடிய பாஜக அலுவலகம்!