காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் மதவாத சக்திகள் உள்ளாட்சி அமைப்புகளை ஆக்கிரமிப்பதை தடுப்பதற்காக, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது என்று


ஜம்மு-காஷ்மீரில் மதவாத சக்திகள் உள்ளாட்சி அமைப்புகளை ஆக்கிரமிப்பதை தடுப்பதற்காக, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ஏ.மீர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக விலக்கிக் கொண்டதை அங்கு ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் மெஹபூபா முஃப்தியின் பிடிபி கட்சி, ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் வலியுறுத்தி வருகின்றன. அதுவரை உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சிகள் கூறியுள்ளன.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை, மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக, மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மீர் கூறினார். இதுதொடர்பாக, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை மேலும் கூறியதாவது:
உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக, ஆர்எஸ்எஸ் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளில் மதவாத சக்திகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளோம்.
மேலும், இந்தத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில நிர்வாகம் அளித்தாக வேண்டும். இதை, மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தியதில் இருந்து வலியுறுத்தி வருகிறோம். வேட்பாளர்ளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வோம். இல்லையெனில், தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்வோம்.
பிராந்திய கட்சிகள், தங்களுடைய சொந்தப் பிரச்னைகளுக்காக உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கின்றன. ஆனால், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு மதவாத சக்திகளைத் தடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. 
உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கும் கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருக்கலாம். அக்கட்சிகள் அடுத்து வரும் தேர்தல்களில் கூட்டணி அமைக்கலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com