குற்றவாளியாக அறிவிக்கப்படும் எம்எல்ஏ, எம்பிக்களின் சதவீதம் குறைந்து வருகிறது: மத்திய அரசு

இந்தியாவில் இது தேர்தல் நேரம் என்றே சொல்லலாம். மிசோரம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சட்டப்பேரவைத்  தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.
குற்றவாளியாக அறிவிக்கப்படும் எம்எல்ஏ, எம்பிக்களின் சதவீதம் குறைந்து வருகிறது: மத்திய அரசு

இந்தியாவில் இது தேர்தல் நேரம் என்றே சொல்லலாம். மிசோரம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சட்டப்பேரவைத்  தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலை இந்தியா சந்திக்கவிருக்கிறது. இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளில் அவர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்படுவது 6 சதவீதமாகக் குறைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது, ஒட்டுமொத்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் 3,884 வழக்குகளில் - தண்டனை பெற்றால் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க வகை செய்யும் குற்றங்கள் - 38 வழக்குகளில் மட்டுமே எம்.பி., அல்லது எம்.எல்.ஏ. குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாகவும், 560 வழக்குகளில் நிரபராதிகள் என்றே கூறப்பட்டிருப்பதாகவும், செப்டம்பர் 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

29 மாநிலங்களில் 18 மாநில எம்பி, எம்எல்ஏக்களும், 7ல், 2 யூனியன் பிரதேசங்களிலும் எந்த எம்.பி., எம்.எல்.ஏ.வும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படவில்லை.

அதிகப்படியான வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது கேரளாவில்தான். அங்கு 147 மக்கள் பிரதிநிதிகள் விடுதலை செய்யப்பட்டும், 8 பேர் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. அடுத்தபடியாக தமிழகத்தில் 68 பேர் விடுதலை செய்யப்பட்டு, 3 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். பிகாரில் 48 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.

அதிகமானோர் தண்டனை பெற்றவர்களின் வரிசையில் ஒடிசா (10), கேரளா (8), உத்தரப்பிரதேசம் (5) ஆகியவை உள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் வழக்கின் போது மத்திய அரசு இந்த அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்தியாவில் ரூ.7.8 கோடி செலவில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பிகார், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தில்லியில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com