கேரள மாநில காங்கிரஸ் தலைவராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நியமனம்

கேரள மாநில காங்கிரஸ் தலைவராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.
கேரள மாநில காங்கிரஸ் தலைவராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நியமனம்


கேரள மாநில காங்கிரஸ் தலைவராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.
முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்துள்ள ராமச்சந்திரன், இப்போது கேரள மாநிலம் வட்டக்கரா மக்களவை எம்.பி.யாக உள்ளார். இதற்கு முன்பு எம்.எம். ஹசன் கடந்த 2017 மார்ச் மாதம் முதல் கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
காங்கிரஸ் தலைமையுடன் காட்டி வந்த நெருக்கம், மாநிலத்தில் கட்சியில் எந்த அணியையும் சாராதவர் என்ற நற்பெயர் காரணமாக ராமச்சந்திரனுக்கு மாநில தலைவர் பதவி கிடைத்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
பதவி கிடைத்துள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த ராமச்சந்திரன், கட்சித் தலைமை என் மீது வைத்துள்ள நம்பிக்கையை முழுமையாகக் காப்பாற்றும் வகையில் எனது பணி அமையும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் காங்கிரஸ் சிறப்பான வெற்றி பெறும் வகையில் எனது பணிகள் அமையும்' என்றார்.
கேரள மாநில காங்கிரஸின் செயல் தலைவர்களாக கே.சுதாகரன், எம்.ஐ.ஷாநவாஸ், கே.சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில பிரசாரக் குழு தலைவராக கே.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com