முசாஃபர்பூர் சிறுமிகள் பாலியல் வழக்கு சோதனை: முன்னாள் அமைச்சரின் கணவருக்கு எதிராக பிடியாணை

பிகார் மாநில முன்னாள் அமைச்சர் மஞ்சு வெர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வெர்மாவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
முசாஃபர்பூர் சிறுமிகள் பாலியல் வழக்கு சோதனை: முன்னாள் அமைச்சரின் கணவருக்கு எதிராக பிடியாணை

பிகார் மாநில முன்னாள் அமைச்சர் மஞ்சு வெர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வெர்மாவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்று காப்பகத்தை நடத்தி வந்தது. அங்கிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக காப்பகத்தை நடத்தி வந்த பிரஜேஷ் தாகூர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், முசாஃபர்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுக்காப்பு அதிகாரி ரவிகுமார் ரௌஷனும் ஒருவர்.    

இந்த கைது நடவடிக்கையை அடுத்து ரவிகுமாரின் மனைவி ஷிவ்குமாரி, 'அமைச்சர் மஞ்சுவின் கணவர் சந்தேஷ்வர் காப்பகத்தில் உள்ள சிறுமிகளின் அறைகளுக்கு அடிக்கடி தனியாக சென்றுள்ளார்' என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில்,"எனது கணவர் குற்றவாளியாக அறியப்பட்டால், பொதுவெளியில் அவரை தூக்கிலிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இருக்காது" என்று சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வெர்மா தெரிவித்தார். இருப்பினும் எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தால் மஞ்சு வெர்மா கடந்த மாதம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். 

இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் பாட்னா மற்றும் பெகுசாராயில் உள்ள அமைச்சர் மஞ்சு வெர்மா இல்லங்கள் உட்பட 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, மஞ்சு வெர்மாவின் பெகுசாராய் இல்லத்தில் இருந்து 50 தோட்டாக்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சந்தேஷ்வர் வெர்மாவுக்கு எதிராக ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். 

இதனிடையே, முன்ஜாமீன் கோரி மஞ்சு வெர்மா மற்றும் சந்தேஷ்வர் வெர்மா தாக்கல் செய்த மனுவை பெகுசாராய் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது.  

இந்நிலையில், சந்தேஷ்வர் வெர்மாவுக்கு எதிராக பெகுசாராய் மாவட்ட எஸ்பி ஆதித்ய குமார் இன்று பிடியாணை பிறப்பித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com