கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பேராயர் பிராங்கோ முல்லக்கல்  கைது    

கொச்சி: கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முல்லக்கல்லை கேரளா காவல்துறை கைது செய்துள்ளது 
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பேராயர் பிராங்கோ முல்லக்கல்  கைது    

கொச்சி:  கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முல்லக்கல்லை கேரளா காவல்துறை கைது செய்துள்ளது 

ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் பேராயராக இருந்த ஃபிரான்கோ முலாக்கல் மீது கேரளா கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகாரை முன்வைத்தார். கடந்த 2014-இல் இருந்து 2016 வரையில் ஃபிரான்கோ பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதைக் கேரள காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

அதேசமயம் கடந்த வெள்ளிக்கிழமை, பேராயர் மீது பாலியல் புகாரை முன்வைத்த கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை சம்பந்தப்பட்ட திருச்சபை வெளியிட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

போலீசாரின் கைது நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு பிரான்கோ முலாக்கல் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை 25-ந் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அத்துடன் அதே தேதியில் கேரள அரசு இதுதொடர்பாக விரிவான மனுதாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   

அதுசமயம் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முலாக்கல் சிறப்பு விசாரணைக் குழு முன் புதனன்று விசாரணைக்கு ஆஜரானார். கொச்சி மாவட்டம் திரிபுரந்தராவில் அமைந்துள்ள குற்றப் பிரிவு விசாரணை அலுவலகத்தில், வைக்கோம் காவல்துறை துணை கண்காணிப்பாளரான சுபாஷ் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு அவரிடம் விசாரனை கடந்த மூன்று நாட்களாக நடத்தி வந்தது. 

இந்நிலையில் மூன்றாவது நாளாக வெள்ளியன்று விசாரணைக்கு ஆஜரான பேராயர் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்வதாக கேரளா காவல்துறை அறிவித்தது.   

முன்னதாக கடந்த மாதம் 15-ஆம் தேதி ஜலந்தரில் உள்ள அவரது இல்லத்தில் கேரள மாநில காவல்துறையினர் சுமார் 9 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com