இந்தியா

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்க பொதுநல வழக்கு 

DNS

புது தில்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்க வலியுறுத்தி, தில்லி பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஷ்வினி குமாா் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தப் பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது சட்டப்பிரிவு தற்காலிகமான ஒன்றுதான். இந்தச் சட்டப்பிரிவின் ஆயுள்காலம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட ஜனவரி 26, 1950 அன்று வரை மட்டுமே. மேலும், இந்தச் சட்டப்பிரிவின் மூலம் உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீா் அரசியலமைப்புச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் இன்று வரை ஒப்புதல் வழங்கவில்லை.

இந்தியா முழுவதும் ஒரே அரசியலமைப்புச் சட்டம் பின்பற்றப்பட்டு வரும்போது, ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கி, தனி அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்கியது நியாயமற்றதும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும் ஆகும். மேலும் இது, ‘ஒரு தேசம், ஒரு அரசியலமைப்புச் சட்டம், ஒரு தேசியக் கொடி, ஒரு தேசிய கீதம்’ என்ற கொள்கைக்கும் எதிராக உள்ளது. எனவே, சட்டப்பிரிவு 370யை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறறப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது சட்டப்பிரிவு, ஜம்மு-காஷ்மீா் மாநில சட்டப்பேரவைக்குச் சட்டங்களை இயற்றும் சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. இந்தச் சட்டப்பிரிவின் மூலமே, ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்குச் சிறப்புக் குடியுரிமை வழங்கும் 35ஏ சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பொதுநல வழக்கின் மீது, அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT