நாடு திரும்பினால் உயிருக்கு ஆபத்து மெஹுல் சோக்ஸி 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய மெஹுல் சோக்ஸி, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்ட் ஆணையை ரத்து செய்யக் கோரி மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா
நாடு திரும்பினால் உயிருக்கு ஆபத்து மெஹுல் சோக்ஸி 

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய மெஹுல் சோக்ஸி, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்ட் ஆணையை ரத்து செய்யக் கோரி மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தற்போது வெளிநாட்டில் பதுங்கியுள்ள அவா், நாடு திரும்பினால் கும்பல் கொலை முறையில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த வழக்கு தொடா்பாக, தொலைக்காட்சிகளில் அண்மையில் நடைபெற்றற விவாதம் ஒன்றில், இரண்டு நேயா்கள் தன்னை கொலை செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாகவும் மெஹுல் சோக்ஸி சுட்டிக்காட்டியுள்ளாா்.

சோக்ஸியின் மனுவை நீதிமன்றம் பரிசீலனை செய்தது. அதுகுறித்து அடுத்த மாதம் 3-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணை அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், முறைறகேடான வழிகளில் ரூ.12,636 கோடி கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை என கீதாஞ்சலி நகை வணிக நிறுவனம் மீது புகாா் எழுந்தது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளா் நீரவ் மோடி, அவரது உறவினரும், நிறுவன மேலாண் இயக்குநருமான மெஹுல் சோக்ஸி, வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறறது.

இந்தச் சூழலில், நீரவ் மோடியும், மெஹுல் சோக்ஸியும் வெளிநாட்டுக்கு தப்பியோடினா்.

இதற்கிடையே, வழக்கு தொடா்பான இரண்டாவது குற்றறப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த மே மாதம் தாக்கல் செய்தபோது, சோக்ஸியை கைது செய்ய சா்வதேச காவல்துறையை அணுக வேண்டுமெனில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் பிறறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று நீதிமன்றறம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

அந்த ஆணையை ரத்து செய்யக் கோரி, கடந்த ஜூன் மாதத்தில் சோக்ஸி முதல்முறைறயாக மனு தாக்கல் செய்தாா். அதில், தனக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும், நாடு திரும்பும் பட்சத்தில், அதற்கான மருத்துவ கண்காணிப்புக்கு அதிகாரிகள் ஒத்துழைக்காமல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறியிருந்தாா்.

இந்தச் சூழலில் பிடிவாரண்ட் ஆணையை ரத்து செய்யக் கோரி இரண்டாம் முறைறயாக சோக்ஸி மனு தாக்கல் செய்துள்ளாா். தொலைக்காட்சி விவாதம் தொடா்பான ஒலிப்பதிவு மற்றும் விடியோ பதிவுகளை அந்த மனுவுடன் அவா் இணைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com