இந்தியா

நகர்ப்புற நக்ஸல்களுக்கு ராகுல் காந்தி ஆதரவு அளிக்கிறார்: அமித் ஷா குற்றச்சாட்டு

DIN


பிரதமரைக் கொல்ல திட்டமிட்ட நகர்ப்புற நக்ஸல்களுக்கு ராகுல் காந்தி ஆதரவளிக்கிறார் என்று பாஜக தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன? என்பதையும் அவர் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒரு நாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அமித் ஷா, கட்சி தொண்டர்கள் முன்னிலையில் உரையாடிய போது கூறியதாவது:
இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி பகல் கனவு காண்கிறார். சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவையின் 90 தொகுதிகளில், குறைந்த பட்சம் 65 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக வைத்துக் கொண்டு பாஜக தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். 65 தொகுதிகளுக்கு குறைவாக வெற்றி பெற்றால் அது பெருமைப் படக் கூடிய வெற்றியாக இருக்காது. மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து, மாநிலங்களில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியது. இந்த 4 ஆண்டுகளில் பாஜக என்ன செய்து விட்டது? என்று ராகுல் கேள்வி எழுப்புகிறார். இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் வறுமையில் வாடும் மக்களுக்காக காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை பாஜக அரசு செய்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, முந்தைய மன்மோகன் அரசு அமைதியாக இருந்தது. ஆனால் பாஜக அரசில் பாகிஸ்தான் மீது எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அமித் ஷா பேசினார். 
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சட்டப் பேரவையில் பாஜக 49 இடங்களைக் கொண்டுள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டில் இருந்து அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வழிபாடு: சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள ஷதானி தர்பார்' என்னும் சிந்தி சமய கோயிலில் பாஜக தலைவர்அமித் ஷா வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தார். ~ ஒரு நாள் பயணமாக சத்தீஸ்கர் வந்த அமித் ஷா, ராய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு முதலில் சென்றார். பின்பு அங்குள்ள ஷதானி தர்பாருக்கு சென்று வழிபட்டார். கட்சி பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சிந்தி சமூக மக்களை சந்தித்த அவர், வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT