இலவச மென்பொருள் விழா: கேரள அரசு அறிவிப்பு

கேரளத்தில் அனைவருக்கும் அக்டோபர் 2-ஆம் தேதி இலவச மென்பொருள் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. 
இலவச மென்பொருள் விழா: கேரள அரசு அறிவிப்பு

கேரளத்தில் அனைவருக்கும் அக்டோபர் 2-ஆம் தேதி இலவச மென்பொருள் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. 

மென்பொருள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் இலவச மென்பொருள் வழங்கும் திட்டத்தை கேரள அரசு ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கேரள தொழில்நுட்ப கட்டுமான கல்வி அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

அக்டோபர் 2-ஆம் தேதி அனைவருக்கும் இலவச மென்பொருள் வழங்கவுள்ளோம். இவற்றில் ஆபரேடிங் சிஸ்டம் (ஓ.எஸ்.), லினக்ஸ், எம்.எஸ்.ஆஃபிஸ், டிடிபி, கிராஃபிக்ஸ், விடியோ மற்றும் ஆடியோ எடிட்டிங், அனிமேஷன், வெப் மற்றும் டேட்டாபேஸ் சர்வர் ஆகியன நுகர்வோருக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த மென்பொருள்கள் தொடர்பாக அரிய இலவச கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்களை கேரள தொழில்நுட்ப கட்டுமான கல்வி அமைப்பின் இணையதளத்தில் (www.kite.kerala.gov.in)புதன்கிழமைக்குள் பதிவிட வேண்டும். தேவைப்படும் விவரங்களை தலைமை அலுவலகத்தில் மற்றும் 9447089009 என்ற தொலைபேசியின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றிருந்தது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com