இந்தியா

ரஃபேல் ஒப்பந்தத்தில் ராபர்ட் வாத்ரா நிறுவனத்துக்கு தொடர்பா? காங்கிரஸ் மறுப்பு

DIN

ரஃபேல் ஒப்பந்தத்தில் ராபர்ட் வத்ரா நிறுவனத்தை இடைத்தரகராக நியமிக்க காங்கிரஸ் முயற்சித்ததாக பாஜக வைத்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி செவ்வாய்கிழமை மறுத்துள்ளது. 

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,

"ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கான ஒப்பந்தப் புள்ளி எப்போது வெளியிடப்பட்டது? இதுதொடர்பாக, ஆகஸ்ட் 2007-இல் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொள்ள சர்வதேச நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மீதான ஏலம் டிசம்பர் 12, 2012-இல் தான் நடைபெற்றது, 2008-இல் அல்ல. இதில், உங்களுடைய உண்மைகளை திருத்திக்கொள்ளுங்கள்.   

டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் மார்ச் 13, 2014-இல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடட் நிறுவனத்தை கூட்டாளி நிறுவனமாக்கியது என்று கூறினார். 

டிசம்பர் 12, 2012-இல் ஒரு ரஃபேல் போர் விமானத்துக்கு 526 கோடி ரூபாய் என காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. எதற்காக அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதே போர் விமான ஒப்பந்தத்தை ரூ.1,670 கோடிக்கு வாங்குனீர்கள்? ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தை தான் கூட்டாளி நிறுவனமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தேர்ந்தெடுத்தது. 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திட்டத்தை பிரதமர் மோடி நீக்கிவிட்டு, புதிய கூட்டாளி நிறுவனமாக தனியார் நிறுவனத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நீங்கள் இந்தியாவின் பிரதமர் அல்ல, அம்பானியின் பிரதமர் என்பதை நிரூபிக்க இது போதாதா?" என்றார். 

முன்னதாக, "ரஃபேல் ஒப்பந்தத்தில் ராபர்ட் வாத்ராவின் நிறுவனத்தை இடத்தரகராக நியமிக்க காங்கிரஸ் முயற்சித்ததாக மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான கஜேந்திர சிங் ஷேகாவத் திங்கள்கிழமை குற்றம்சாட்டியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT