இந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள்: கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிய துணை முதல்வர் 

இந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள் என்று கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிக் கொள்வதாக பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பேசியிருக்கும் வினோதம் நிகழ்ந்துள்ளது. 
இந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள்: கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிய துணை முதல்வர் 

கயா: இந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள் என்று கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிக் கொள்வதாக பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பேசியிருக்கும் வினோதம் நிகழ்ந்துள்ளது. 

ஹிந்து மத நாட்காட்டியின்படி  'பத்ரபடா' மாதத்தில் சந்திரனின் வளர் மற்றும் தேய் பருவங்களை வைத்து 16 நாட்கள் 'பித்ரு பக்ஷா' என்னும் பருவமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த பருவத்தில் ஹிந்து மக்கள் தமது முன்னோர்களுக்கு 'திதி' வழங்குவார்கள். குறிப்பாக அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலாக சமர்ப்பிப்பார்கள். 

இவ்வருடம் அந்த காலமானது நேற்று திங்களன்று துவங்கி வரும் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது.

இந்நிலையில் 'பித்ரு பக்ஷா' பருவத்தில் உள்ள இந்த 16 நாட்களாவது அமைதியாக இருஙகள் என்று கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிக் கொள்வதாக பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பேசியிருக்கும் வினோதம் நிகழ்ந்துள்ளது. 

பிகாரின் கயா பகுதியில் ஞாயிறன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பேசியதாவது:

'பித்ரு பக்ஷா' பருவத்தில் உள்ள இந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள் என்று கிரிமினல்கள் அனைவரிடமும் கை கூப்பி வேண்டிக் கொள்கிறேன். மற்ற நாட்களில் நீங்கள் என்ன செய்கிறீர்களாளோ அதை தொடர்ந்து செய்து கொண்டிருங்கள்

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.   

ஒரு மாநிலத்தின் துணை முதல்வரே கிரிமினல்களிடம் இவ்வாறு பேசியிருக்கும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com