எதிர்க்கட்சிகளுக்கு மோடி மீது அச்சம்: அமித் ஷா

எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது அச்சம் ஏற்பட்டுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் திங்கள்கிழமை சுகாதாரத் துறை பணியாளர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.
ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் திங்கள்கிழமை சுகாதாரத் துறை பணியாளர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.


எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது அச்சம் ஏற்பட்டுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஒடிஸா மாநிலத்துக்குச் திங்கள்கிழமை சென்ற அமித் ஷா, அங்கு பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒன்றிணைந்து தேசத்தை சிறப்பான மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. 
இதன் மூலம் பொருளாதாரரீதியாக வலுவான நாடாக இந்தியா உருவாகி வருகிறது. பிரதமர் மோடி நவீன இந்தியாவைப் படைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 
அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க நினைக்கின்றன. நாட்டில் வறுமையை ஒழிக்க பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். 
ஆனால், அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேவையற்ற குழப்பத்தை விளைவிக்க முயலுகின்றன. 
இந்தியாவின் மாபெரும் தலைவராக மோடி உருவெடுத்துள்ளார். அவரைக் கண்டு எதிர்க்கட்சியினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் வேலையின்மை பிரச்னையை நீக்க வேண்டும் என்று மோடி செயல்படுகிறார். 
ஆனால், அவரையே பதவியில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் பிரதான நோக்கமாக உள்ளது. 
மக்கள் மத்தியில் எவ்வித அச்ச உணர்வும் இருக்கக் கூடாது என்று பாஜக பாடுபடுகிறது. ஆனால், மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி இந்த ஆட்சியை மாற்ற எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன. 
நாட்டு நலன் சார்ந்து செயல்படும் ஒரு தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்கள் விரோத செயல்பாடு என்பது உங்களுக்கு நான் கூறித் தெரிய வேண்டியதில்லை.
ஒடிஸா, தாது வளமிக்க மாநிலம். ஆனால், இங்கு போதிய வளர்ச்சி ஏற்படாததற்கு, முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசின் செயல்திறன் குறைபாடுதான் காரணம் என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com