இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார்: ராஜ்நாத் சிங்

DIN


காஷ்மீர் பிரச்னை குறித்து அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ரஃபேல் ஒப்பந்தத்தை முன்னிறுத்தி தேர்தல் ஆதாயம் அடைய காங்கிரஸ் முயன்று வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மத்திய மண்டல கவுன்சிலின் கூட்டம் ராஜ்நாத் சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெற்ற அக்கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சாலை வசதிகளை மேம்படுத்துதல், மாவோயிஸ்டு தீவிரவாதத்தை ஒடுக்குதல், காவல்துறையை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்நாத் சிங்கிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுக்கு அவர் அளித்த பதில்:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலாந்த் முதலில் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், அவை குறித்து அவரே சில விளக்கங்களைத் அளித்துள்ளார். அதாவது, இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தை அந்த ஒப்பந்தத்தில் இணைத்தது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட பிரான்ஸ் விமான தயாரிப்பு நிறுவனமே விளக்கமளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை என்பது தெளிவாகிறது. வேண்டுமென்றே இதை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி சந்தேகங்களை எழுப்புவது தேர்தல் ஆதாயத்துக்காகத்தானே தவிர அதில் வேறு எந்த நோக்கமும் இல்லை.
காஷ்மீர் பிரச்னைகளை எடுத்துக் கொண்டால், அவற்றுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதுதொடர்பாக அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.
அந்த மாநிலத்தில் அரங்கேற்றப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க பாதுகாப்புத் துறை பல்வேறு தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. காஷ்மீரில் நிகழ்த்தப்படும் பயங்கரவாதச் சம்பவங்கள் அனைத்தின் பின்னணியிலும் பாகிஸ்தான் உள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT