கோவா அமைச்சரவையில் இருந்து இருவர் விடுவிப்பு: பாரிக்கர் நடவடிக்கை

உடல் நலிவுற்றிருக்கும் கோவா அமைச்சர்கள் இருவரை அப்பொறுப்பிலிருந்து மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் திங்கள்கிழமை விடுவித்துள்ளார். அவர்களுக்குப் பதிலாக
கோவா அமைச்சரவையில் இருந்து இருவர் விடுவிப்பு: பாரிக்கர் நடவடிக்கை

உடல் நலிவுற்றிருக்கும் கோவா அமைச்சர்கள் இருவரை அப்பொறுப்பிலிருந்து மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் திங்கள்கிழமை விடுவித்துள்ளார். அவர்களுக்குப் பதிலாக மிலிந்த் நாயக், நிலேஷ் கேப்ரல் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
கணைய பாதிப்பு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரிக்கர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த பரிந்துரையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கோவா அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோவாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து 14 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் அங்கு ஆட்சியமைத்தது. அப்போதிருந்து மாநிலத்தின் முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவி வகித்து வருகிறார்.
அவரது அமைச்சரவையில் மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை ஃபிரான்சிஸ் டிசோஸாவுக்கும், மின்துறை அமைச்சர் பாண்டுரங் மட்கைகருக்கும் வழங்கப்பட்டது. இதனிடையே, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட டிசோஸா, அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோன்று, மட்கைகரும் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சூழலில், அவர்கள் இருவரையும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்குமாறு பாரிக்கர் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு மாற்றாக புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனிடையே, அமைச்சரவை மாற்றத்துக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள டிúஸாசா, 20 ஆண்டுகளாக கட்சிக்காக உண்மையாக உழைத்ததற்கு கிடைத்த வெகுமதி இதுதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக்காலமாக கோவா மாநில அரசியல் களம் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்து வருகிறது. கோவா முதல்வர் பாரிக்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதே அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக முதல்வர் பொறுப்புக்கு புதிதாக ஒருவரை நியமிக்கப்படலாம் எனச் செய்திகள் வெளியாகின வெளியாகின.
அந்தக் கருத்தையே காங்கிரஸும் தெரிவித்தது. மேலும், பாரிக்கர் இல்லாததால் கோவாவில் அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாக ஆளுநரிடம் முறையிட்ட காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் ஆட்சியமைக்கவும் உரிமை கோரியது. இத்தகைய சூழலில், எவரும் எதிர்பார்க்காத வகையில் அமைச்சரவையில் பாரிக்கர் மாற்றம் செய்தது அரசு நிர்வாகத்தை மருத்துவமனையில் இருந்தவாறே அவர் மேற்கொண்டு வருகிறார் என்பதை உறுதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com