இந்தியா

விபத்து: கன்னட நடிகர் தர்ஷன் காயம்

DIN


மைசூரு அருகே திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் கன்னட நடிகர் தர்ஷனின் வலது கை எலும்பு முறிந்தது. மேலும், அவருடன் சென்ற நடிகர்கள் தேவராஜ், பிரஜ்வல், அந்தோணி ஆகியோர் காயமடைந்தனர்.
கன்னட நடிகரான தர்ஷன், மூத்த நடிகர் தேவராஜ், அவரது மகனும் நடிகருமான பிரஜ்வல் ஆகியோருடன் மைசூரு வனவிலங்கு சரணாலயத்துக்கு ஞாயிற்றுக்கிமை சென்றனர். பிறகு, மைசூரு பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரைச் சந்தித்துவிட்டு திங்கள்கிழமை அதிகாலை காரில் பெங்களூருக்குச் சென்றனர்.
மைசூரு வி.வி.புரம் வெளிவட்டச் சாலையில் பலத்த மழையால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலைத் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் நடிகர் தர்ஷனின் வலது கை எலும்பு முறிந்தது. நடிகர்கள் தேவராஜ், பிரஜ்வல், தர்ஷனின் நண்பர் அந்தோணி ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து, தர்ஷன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT