இந்தியா

நகைப்பூட்டும் இயந்திரமாக மாறிவிட்டார் ராகுல்: சிவராஜ் சிங் சௌஹான் கிண்டல்

DIN


நகைப்பூட்டும் இயந்திரமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாறிவிட்டார் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கிண்டலாகத் தெரிவித்தார்.
சௌஹான், வெற்று வாக்குறுதிகளை அளிக்கும் இயந்திரமாகிவிட்டார் என்று சமீபத்தில் ராகுல் கூறியிருந்த நிலையில் இவ்வாறு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியா
ளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:
மத்தியப் பிரதேசத்தில் திக்விஜய் சிங் தலைமையிலான ஆட்சிக் காலம் (1993-2003) இருண்ட காலமாக இருந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதுபோல், நான் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறேன். அவை ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான அறிவிப்புகள்.
கடந்த ஜூலை மாதம், மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் பிரதமர் மோடியை ஆரத் தழுவியதுடன் இருக்கையில் அமர்ந்த பின்னர், கண்சிமிட்டினார் ராகுல். இதன்மூலம், நகைப்பூட்டும் நபராக அவர் மாறிவிட்டதைக் கண்டேன். நகைப்பூட்டும் இயந்திரம் என்னை வாக்குறுதிகளை அளிக்கும் இயந்திரம் என்று ஒப்பிடுகிறது. நான் மக்களை ஏமாற்றுபவர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். மத்தியப் பிரதேசத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. எனது தலைமையிலான பாஜக அரசின் 15 ஆண்டு கால ஆட்சியில் நீர்ப்பாசன பகுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 7.5 லட்சம் ஹெக்டேர் நிலப் பகுதியில் நீர்ப்பாசன வசதி இருந்தது. தற்போது 40 லட்சம் ஹெக்டேர் நிலப் பகுதியாக அது விரிவடைந்துள்ளது. ராஜா, மகாராஜா, தொழிலதிபர் இவர்கள் எல்லாம் விவசாயியின் மகனான எனக்கு பிறகு தான் என்றார் சௌஹான்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத் ஆகியோரை முறையே ராஜா, மகாராஜா, தொழிலதிபர் என சௌஹான் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT