முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 86ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்,
“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர், நீண்ட நாட்கள் நல்ல உடல் நலம் மற்றும் ஆயுளுடன் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பிதிவில்,
தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டை கட்டியெழுப்ப காரணமாக இருந்தவர் மன்மோகன் சிங். மன்மோகன் சிங் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com