இந்தியா

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான 'துல்லிய தாக்குதல்': புதிய விடியோ வெளியீடு 

ANI

புது தில்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய 'துல்லிய தாக்குதல்' தொடர்பான புதிய விடியோ வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது. 

2016, செப்டெம்பர் 16-ஆம் தேதியன்று காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் உரி பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, உரி தாக்குதல் நடந்து 10 நாள்களுக்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய இராணுவம் அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது 'துல்லிய தாக்குதல் ' நடத்தியது. 

இந்த துல்லிய தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டன. துல்லிய தாக்குதல் தொடர்பாக அரசியல் லாபத்துக்காக பிரதமர் மோடி பொய் சொல்வதாக தில்லி முதல்வர் கேஜரிவால் அப்போது குற்றம் சாட்டியிருந்தார். துல்லிய தாக்குதல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, அதற்கான ஆதாரங்கள் அடங்கிய விடியோவை மத்திய அரசு அனுமதியுடன் இந்த ஆண்டு ஜூன் மாதம் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டது. அதன் பிறகு அதுதொடர்பான விவாதங்கள் சற்றே ஓய்ந்தன. 

சமீபத்தில் மீண்டும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் மாநில காவலர்கள் மூவரை கொடூரமாகக் கொன்ற சம்பவம் நடந்தது. அதற்கு எதிர்வினையாக மீண்டும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்படும் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய 'துல்லிய தாக்குதல்' தொடர்பான புதிய விடியோ வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இன்னும் இரு நாட்களில் 'துல்லிய தாக்குதல்' நடவடிக்கையின் இரண்டாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

விடியோ :
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT