இந்தியா

காங்கிரசை காப்பியடித்ததற்கு நன்றி: இடைக்கால பட்ஜெட் குறித்து சிதம்பரம்

DIN

புது தில்லி: காங்கிரசை காப்பியடித்ததற்காக இடைக்கால நிதியமைச்சருக்கு நன்றி என்று இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

2019 - 2020 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தேர்தல் காலம் என்பதால் வாக்குகளைக் குறிவைத்து பட்ஜெட்டில் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள்மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.   

இந்நிலையில் காங்கிரசை காப்பியடித்ததற்காக இடைக்கால நிதியமைச்சருக்கு நன்றி என்று இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நாட்டில் உள்ள நிதி ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்வதில் ஏழை மக்களுக்கே முன்னுரிமை என்பது காங்கிரசின் உறுதிமொழி. பட்ஜெட்டில் இதனைக் காப்பியடித்ததற்காக இடைக்கால நிதியமைச்சருக்கு நன்றி.  இடைக்கால பட்ஜெட் நாட்டின் கணக்குகளைப் பற்றிய மதிப்பீடு (Vote on Account) அல்ல; இது ஓட்டுகளின் கணக்கு (Account for Votes).    

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT