இந்தியா

சிறப்பான தரமான பட்ஜெட்: பியூஸ் கோயலை புகழ்ந்து தள்ளிய அருண் ஜேட்லி 

DIN

புது தில்லி: வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் சிறப்பான தரமான பட்ஜெட் என்று பியூஸ் கோயலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

2019 - 2020 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவின் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளதால், மின்துறைஅமைச்சரான பியூஷ் கோயல் நிதித்துறையினை  கூடுதல் பொறுப்பாக ஏற்றுக் கொண்டு, இடைக்கால பட்ஜெட்டைஅவையில் தாக்கல் செய்தார்.

தேர்தல் காலம் என்பதால் வாக்குகளைக் குறிவைத்து பட்ஜெட்டில் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் மத்தியில் பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.   

இந்நிலையில் வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் சிறப்பான தரமான பட்ஜெட் என்று பியூஸ் கோயலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பியூஷ் கோயல் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டானது, பிரதமர் மோடி நாட்டுக்கு அளித்துள்ள கொள்கைகளின் வழியாகச் செல்லும் பயணத்தின் ஓர் முக்கிய அம்சமாகும்.    

இந்த நான்கு வருட செய்லபாடுகளை ஆராய்வதற்கும், மக்கள் முன் உண்மைகளை சமர்ப்பிப்பதற்கும் அரசுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இந்த பட்ஜெட் தினம் அமைந்துள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள சலுகைகளை சமாளிக்கும் வகையில் சிறப்பான தரமான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள பியூஷ் கோயிலுக்கு பாராட்டுக்கள்.

இது அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக அமைந்துள்ளதுடன், நடுத்தர வர்க்க மக்களின் வாங்கும் திறனை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்பது கேள்விகளுக்கு இடமில்லாத உண்மையாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT