முல்லைப்பெரியாறு நீர்பிடிப்புப் பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு 

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் கேரளா அரசு மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.
முல்லைப்பெரியாறு நீர்பிடிப்புப் பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு 

புது தில்லி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் கேரளா அரசு மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழகத்துக்கு சொந்தமான நிலத்தில் மெகா கார் பார்க்கிங் ஒன்றைக் கட்ட கேரள அரசின் வனத்துறை நடவடிக்கை எடுத்தது.

ஆனால் கேரளாவின் இந்த திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2014–ம் ஆண்டிலேயே மனுதாக்கல் செய்தது. அந்த மனுமீதான விசாரணையின்போது நீதிபதிகள், இந்த விவலாராம் தொடர்பாக  இரு மாநிலங்களின் உயர் அதிகாரிகள் நேரடியாக சந்தித்து சுமூகமான தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறி இருந்தனர்.

இந்நிலையில்  முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் கேரளா அரசு மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவில் குறிப்பிட்ட பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி இருப்பதுடன், ஏற்கனவே உள்ள கட்டிடங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிகை வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com