ரஃபேல் வழக்கில் விளம்பரத்துக்காக சீராய்வு மனு தாக்கல்: உச்சநீதிமன்றம் அதிருப்தி

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி வழக்குரைஞா்கள் மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்வது விளம்பரத்துக்காக மட்டுமே என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ரஃபேல் வழக்கில் விளம்பரத்துக்காக சீராய்வு மனு தாக்கல்: உச்சநீதிமன்றம் அதிருப்தி


ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி வழக்குரைஞா்கள் மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்வது விளம்பரத்துக்காக மட்டுமே என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ரூ.58,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்தது. 

அதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக நடைபெற்ற நடைமுறைகளில் சந்தேகம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை. எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை’ என்று தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, வழக்குரைஞா்கள் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
 
அதை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று வழக்குரைஞா்கள் முறையிட்டனா்.

அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ‘ரஃபேல் விவகாரத்தில் இந்த நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனுக்களைத் தாக்கல் செய்து வழக்குரைஞா்கள் ஊடக வெளிச்சம் பெற முயற்சிக்கின்றனா்’ என்று அதிருப்தி தெரிவித்தாா்.

முன்னதாக, 36 ரஃபேல் போா் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ்-இந்தியா இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com