காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: தில்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆலோசனை நடத்த தில்லியில் இன்று அனைத்துக் கட்சி
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: தில்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆலோசனை நடத்த தில்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் வியாழக்கிழமை மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்)  வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது ஒரு பயங்கரவாதி வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச் செய்தார். இதில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. 

இந்தியாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய மிகமோசமான இந்த தாக்குதல் சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துகட்சி கூட்டம் இன்று தில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். பாகிஸ்தானிற்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com