இந்தியா

பாகிஸ்தானை உலக அளவில் தனிமைப்படுத்த வேண்டும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

DIN


பாகிஸ்தானை உலக அளவில் தனிமைப்படுத்தவேண்டும் என மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். 
சென்னையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
பயங்கவாதத் தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு எனது இரங்கல்.  இத்துயரச் சம்பவத்தினால் பாஜக சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் இந்திய நாட்டிற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால். பாகிஸ்தான் இதற்கான விளைவை நிச்சயம் சந்திக்கும்.  இந்த நேரத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து, பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்த வேண்டும். இதனைஅரசியலாக்க வேண்டாம் என்றார். 
அதனைத் தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நான்காவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற நிதின் கட்கரி, மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த விழாவில் கட்கரி பேசியது:
தமிழகத்தின் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், ஆந்திரத்தில் கிருஷ்ணா, பெண்ணாறு, காவேரி உள்ளிட்ட நதிகளை இணைத்து பெரிய அணை கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தின் தண்ணீர்  பிரச்னை தீரும். மேலும், சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 6 என்ற அளவில் விலையில் வாங்கப்படுறது. 
குஜராத்தில் அமைக்கப்பட்டு வரும் மிகப்பெரிய சூரியசக்தி பேனல்களின் மூலம் ரூ. 2  விலையில் மின்சாரம் பெற முடியும். தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம், குடிநீர்த் தேவைக்கு மட்டுமின்றி, விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். மிகப்பெரிய அளவில் அணைகளைக் கட்டுவதற்கான செலவை ஒப்பிடும்போது இதற்கான செலவு குறைவு என்றார் அவர். இதில் அமைச்சர் நிதின் கட்காரியுடன் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT