மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார் அருண் ஜேட்லி

மத்திய நிதித்துறை மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சராக அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார் அருண் ஜேட்லி


மத்திய நிதித்துறை மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சராக அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஜனவரி 13-ஆம் தேதி அவர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து நாடு திரும்பியதை அடுத்து அருண் ஜேட்லி மீண்டும் நிதித்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில் அருண் ஜேட்லி மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பை வகிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். முன்னதாக, அவர் துறை ஏதும் இல்லாத மத்திய அமைச்சராக இருந்தார்.
நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜேட்லி பங்கேற்றார். இதில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 
விவாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com