இந்தியா

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் புல்வாமா போன்ற சம்பவங்கள் தொடரும்: ஃபரூக் அப்துல்லா

தினமணி

காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல்ரீதியாக தீர்வு காணப்படவில்லை என்றால் புல்வாமாவில் நிகழ்ந்தது போன்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடரவே செய்யும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து ஜம்முவில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து கடந்த சில நாள்களாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காஷ்மீரில், தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக அப்பாவி இளைஞர்களையும் பாதுகாப்புப் படையினர் குறிவைப்பதாகக் குற்றம்சாட்டி கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
 இந்நிலையில், ஜம்முவில் மசூதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்கள் மத்தியில் ஃபரூக் அப்துல்லா பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
 புல்வாமா தாக்குதலை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான் பங்கேற்றேன். அப்போது, காஷ்மீரில் உள்ள சாமானிய மக்களுக்கும் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தின் பக்கம் இல்லை. கண்ணியமாக உழைத்து வாழவே காஷ்மீர் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை எடுத்துரைத்தேன். எனவே, காஷ்மீர் மக்கள் இந்த நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். எவ்வித கோஷங்களையும் எழுப்பி பிரச்னை ஏற்படுத்தக் கூடாது. இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்.
 சில விஷமிகள் காஷ்மீரில் அமைதி நிலவக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர். காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படவில்லை என்றால் இப்போது நிகழ்ந்தது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடரும் என்ற கருத்தையும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பதிவு செய்துள்ளேன் என்றார் ஃபரூக் அப்துல்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT