இந்தியா

மியூனிக் மாநாட்டில் புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியா முறையீடு

தினமணி

"மியூனிக் பாதுகாப்பு மாநாடு' நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்கா, ஜெர்மனி, ரஷியா உள்ளிட்ட நாடுகளிடம் புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியா முறையிட்டது.
 இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் இவால்டு ஹென்க். பின்னாளில், ஜெர்மனியை காக்க வேண்டும் என்றால் ஹிட்லரைக் கொலை செய்ய வேண்டும் என்று சிந்தனையாளர் குழுவில் இணைந்த அவர், தற்கொலைப் படை போராளியாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதற்கிடையே ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.
 இந்நிலையில், இரண்டாம் உலகப் போர் போன்ற நிகழ்வு உலகில் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலும், உலகின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆலோசிக்கும் நோக்கிலும், ஜெர்மனியில் உள்ள பவேரியா மாகாணத்தின் மியூனிக் நகரில் 1963-ஆம் ஆண்டில் பாதுகாப்பு மாநாடு ஒன்றை இவால்டு ஹென்க் நடத்தினார். அப்போது முதல், இடைப்பட்டக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் தவிர்த்து அந்த மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
 இந்த ஆண்டு மூன்று நாள்கள் நடைபெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெற்றது. இந்தியா சார்பில் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் பங்கஜ் சரண், அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். அதேபோல், மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், பாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்பட 600 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதில், சர்வதேச பயங்கரவாதம் மற்றும் தற்கால - எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
 மியூனிக் மாநாட்டுக்கு இடையே அமெரிக்கா, ஜெர்மனி, ரஷியா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, அர்மேனியா, ஓமன், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிகளைச் சந்தித்து, புல்வாமா தாக்குதல் குறித்து பங்கஜ் சரண் எடுத்துரைத்தார்.
 பாகிஸ்தானின் தூண்டுதலில் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதாக பங்கஜ சரண் தெரிவித்த கருத்தை, பிற நாடுகளின் தலைவர்கள் பெருவாரியாக ஆமோதித்தனர் என்று இதுகுறித்த தகவல்களை அறிந்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 முன்னதாக, அமெரிக்கா, ரஷியா, வங்கதேசம் உள்பட பெரும்பாலான நாடுகள் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, பயங்கரவாதத்துக்கான ஆதரவை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT