கேரளாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர்கள் பொங்கல் வைத்து நூதனப் போராட்டம்

கேரளாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட கேரள போக்குவரத்துத்துறை பெண் ஊழியர்கள் பொங்கல் வைத்து நூதனப் போராட்டத்தை புதன்கிழமை நடத்தினர்.
கேரளாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர்கள் பொங்கல் வைத்து நூதனப் போராட்டம்

கேரளாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட கேரள போக்குவரத்துத்துறை பெண் ஊழியர்கள் பொங்கல் வைத்து நூதனப் போராட்டத்தை புதன்கிழமை நடத்தினர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில போக்குவரத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 3,861 பெண்களும், அம்மாநில சட்டப்பேரவைச் சாலையில் அட்டுக்கல் பொங்கலா வைத்து நூதன முறையில் போராடினர். இதுகுறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட சந்தியா கூறுகையில்,

கடந்த 31 நாட்களாக எங்கள் பணி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறோம். ஆனால், கேரள அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. ஒரு நாளைக்கு ரூ.480 ஊதியத்துக்கு மட்டுமே நாங்கள் பணி செய்து வந்தோம். ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, எந்த முன் அறிவிப்பும் இன்றி எங்கள் அனைவரையும் (3,861) திடீரென பணி நீக்கம் செய்தனர்.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு எங்களுக்கு மட்டும்தான் தெரியும். எங்கள் கோரிக்கைகள் தொடர்பான போராட்டம் இன்னும் அந்த செவிட்டுக் காதுகளுக்கு கேட்கவில்லை. இன்று அட்டுக்கல் தேவி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த பொங்கலா பண்டிகையில் எங்கள் கோரிக்கைகள் அரசுக்கு கேட்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் என்றார்.

அட்டுக்கல் தேவி கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையின் 9-ஆம் நாளில் லட்சக்கணக்கான பெண்கள் ஒன்று கூடி அரிசி, வெல்லம் மற்றும் வாழைப்பழம் அனைத்தையும் மண் பானையில் சமைத்து கடவுளுக்கு படைத்து வழிபட்டு அட்டுக்கல் பொங்கலா கொண்டாடுவர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com