புல்வாமா தாக்குதல் எதிரொலி: ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி அடித்துக் கொலை? 

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்  வெளியாகியுள்ளது.
புல்வாமா தாக்குதல் எதிரொலி: ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி அடித்துக் கொலை? 

ஜெய்ப்பூர் புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்  வெளியாகியுள்ளது.

வியாழனன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுநாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 

அதேசமயம் இதன் காரணமாக மக்களிடையே பாகிஸ்தான் மீதான கோபமும், எதிர்ப்புணர்வும் அதிகரித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் கொடியை சிலர் தீயிட்டு கொளுத்தினர்.

அத்துடன் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மும்பையில் உள்ள  இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கானின் புகைப்படத்தின் மேல் காகிதம் ஒட்டி, அவரது படம் மறைக்கப்பட்டது. அதேபோல பல மாநில கிரிக்கெட் சங்கங்களின் அலுவலகம் மற்றும் மைதானங்களில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் படங்கள் அகற்றப்பட்டன 

இந்நிலையில் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்  வெளியாகியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது மோதலாக முற்றிய நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com