வன்முறையை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது: பினராயி விஜயன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வன்முறையை ஒருபோதும் ஆதரித்தது கிடையாது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் தெரிவித்தார். காஸர்கோடில் காங்கிரஸ்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வன்முறையை ஒருபோதும் ஆதரித்தது கிடையாது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் தெரிவித்தார். காஸர்கோடில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இருவர் கொல்லப்பட்டதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு தொடர்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
கேரள தலைமைச் செயலகத்துக்கு வெளியே, செய்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை முன்வைத்த கேள்விகளுக்கு, பினராயி விஜயன் அளித்த பதில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வன்முறையை ஒருபோதும் ஊக்குவித்தது கிடையாது. பல்வேறு தருணங்களில் வன்முறையை நாங்கள்தான் எதிர் கொண்டிருக்கிறோம். ஆகவே, காங்கிரஸ் ஆதரவாளர்கள் கொலையில் எங்கள் கட்சியை குற்றம்சாட்ட வேண்டியதில்லை. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரசார யாத்திரைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இப்படியொரு சமயத்தில் குறைந்தபட்ச அரசியல் அறிவுடைய எவராது அத்தகைய குற்றத்தை செய்வார்களா?
இந்தக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. 
அதேசமயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் யாரேனும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களை கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. அவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்வதுடன், கட்சியின் நடவடிக்கையையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.
காசர்கோடில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர், வீடு திரும்பிக் கொண்டிருந்த கிருபேஷ், சரத் லால் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களின் தூண்டுதலின் பேரிலேயே இந்தக் கொலை நடத்தப்பட்டதாக காங்கிரஸும், பாஜகவும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் டீன் குரியகோஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com