இந்தியா

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு: நிதின் கட்கரி தகவல் 

DIN

புது தில்லி: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரைத்  தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இந்தஸ் நீர் ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் உற்பத்தியாகும் சீலம், செனாப் மற்றும் இந்துஸ் நதி நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்படி இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாக சென்று அரபிக் கடலில் கலக்கும் இந்துஸ் நதியின் 80 சதவீத நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானால் நடைபெற்ற உரி ராணுவ முகாம் தாக்குதலின் போதே இந்த நதிகளில் இருந்து நீர் பாகிஸ்தானுக்கு செல்வதை தடை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

தற்போது நடைபெற்றுள்ள புல்வாமா தாக்குதலைக்குப் பிறகு இரு நாடுகளிடையேயான உறவு மேலும் சீர்கேட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரைத்  தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவ கூறியதாவது:

இந்தியாவிலிருந்து இதுவரை மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 3 நதிகளின் நீரையும், யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணை கட்டப்பட உள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்து அதை யமுனை ஆற்றில் இணைப்பதன் காரணமாக யமுனை ஆற்றின் நீர்வளம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT