திருப்பதி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம்: குடியரசு துணைத் தலைவர் அடிக்கல்

திருப்பதி விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை விரிவாக்கப் பணிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புதன்கிழமை அடிக்கல்
திருப்பதியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை  வரவேற்ற துணை ஆட்சியர் மகேஷ்.
திருப்பதியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை  வரவேற்ற துணை ஆட்சியர் மகேஷ்.


திருப்பதி விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை விரிவாக்கப் பணிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் வெளிநாட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், திருப்பதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகளை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறவுள்ளது. இதற்கான அடிக்கல்லை புதன்கிழமை மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இன்னும் இரு ஆண்டுகளுக்குள் விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்று, சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், திருப்பதி துணை ஆட்சியர் மகேஷ், விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com