பன்றி காய்ச்சலுக்கு 377 பேர் பலி: சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

நாடு முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை பன்றிக் காய்ச்சல் தாக்கி 377 பேர் உயிரிழந்ததாகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் அறிகுறியுடன்


நாடு முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை பன்றிக் காய்ச்சல் தாக்கி 377 பேர் உயிரிழந்ததாகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 65 பேர் பன்றி காய்ச்சல் நோய்க்கு பலியானதாகவும், 
நாட்டிலேயே அதிகளவாக ராஜஸ்தானில் 127 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3,508 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 71 பேர் உயிரிழந்தும், 1,983 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
தில்லியில் 7 பேரும், பஞ்சாப்பில் 31 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 30 பேரும், ஹிமாசலப் பிரதேசத்தில் 27 பேர், ஜம்மு-காஷ்மீரில் 22 பேர், மகாராஷ்டிரத்தில் 17 பேர், ஹரியாணாவில் 7 பேரும்  உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 377 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12,191 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு இதே சமயத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 1,103 பேர் உயிரிழந்தனர். 14,992 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  
கை, கால்களை கழுவியும், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதன் மூலமாகவும், குப்பைகளை தேங்க விடாமல் உடனுக்குடன் சுத்தம் செய்வதன் மூலமாகவும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளை பரவ விடாமல் தடுக்கலாம் என்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com